Sunday, 29 October 2017

என் அருகில் நீ வேண்டும்!
ஆதித்தனின் அழகு கிரணங்கள்,
 அம்புலியை மறைத்து வர,
அடிவானம் விடியும் அத்தருணம்
என் அருகில் நீ வேண்டும்!

மரங்களின் நிழல்களில்,
மரகத பச்சை புல் வெளியில்,
 இறங்கி வந்த தேவதையாய்,
என் அருகில் நீ வேண்டும்!

மேகலையின் மணிகள் செல்லமாய் சிணுங்க,
காதோரம் கார்குழல் காற்றில் சிலிர்க்க,
கதை பல பேசும் கண்கள் சிரிக்க,
என் அருகில் நீ வேண்டும்!

அந்தி சூரியனின் செங்கிரணங்கள்,
சிந்தி சிதறும் உன் செழுமையான கன்னங்கள்
தித்திக்க, நான் தரும் முத்தங்களில் சிவக்க,
என் அருகில் நீ வேண்டும்!

பெருமழை பேரொலியோடு முழங்கிப் பெருக,
பேராதரவாய் எனை நீ நெருங்கி அணைக்க,
பெரும்பெறாய் உனை நான் தாங்க,
என் அருகில் நீ வேண்டும்!

மந்தமாருதம் மாலைதனில் நழுவ,
தந்தக்கைகள் மாலையாய் எனைத் தழுவ,
காலங்காலமாய்,
என் அருகில் நீ  வேண்டும்! 

பனி நிலவு உலா வரும் இரவில்
உன் கனி இதழ் சுவைக்க ,
நறுமணத்துடன் உன் மேனி சிலிர்த்து அடங்க,
என் அருகில் நீ வேண்டும்!

நெடும் பகலின் முடிவாக,
நடு இரவில் முழுதாக,
என் அருகிலும்,

எனக்குள்ளும் நீ வேண்டும் அன்பே!
   எது வேண்டும் அன்பே?


உயிர் தந்தேன், உடல் தந்தேன்,
இதய சிம்மாசனமும் தந்தேன்,
வேண்டாமென்றாய்!
உதய காலம் வராமலா போகுமேன்றேன்,
கதை என தள்ளுகிறாய்!

பற்றிய கையை விடுத்து,
வெறுப்புடன் விழிகளை திருப்பி,
எனை விட்டு விலகினாயே, அப்போ,
என் உயிரும் எனை விட்டு விலகினதே, அன்பே!

கட்டான உன் உடல்,
பட்டான உன் முகம்,
சட்டென வாடியதை மனம் தாங்குதில்லையடி!
விட்டேனடி பெரும் பொய்யை!


மன்னித்தால் வாழ்வு!
ஏற்றுக்கொண்டால் ஏற்றம்!
என அன்பான பாதை இருக்க,
ஏன் உனக்கு பிடிவாதம்?

கரையேறும் காலம் அருகிலிருக்க,
உறை போட்டு உன் மனதை  மூடுவதேனோ?
உள்ளத்தில் கள்ளமில்லை, பெரும் காதல் மட்டுமே!
என்று புரிவாய் இதை?


உன் வெறுப்பின் நெருப்பில்
கருகவா?
உன் உயிரின் அணைப்பில்
உருகவா?
எது வேண்டும் அன்பே?

      




அது 
எது?

உயிர்?
வெறும் பதர்!

பாலைவன சோலை?
கானல் நீர்!

ரவிவர்மா ஓவியம்?
மேக சித்திரங்கள்!

உதயம்?
வெறும் அடிவான சிவப்பு!

சூரியன்?
ஆழ் கடல்!

பனித் துளி?
................ துளி!!

பயண முடிவு?
இடையில் ஏற்பட்ட தடங்கல்!

Tajmahal?
Haunted Hut!

ஆம்?
இல்லை!

எனக்கு?
என் எழுத்துகளுக்கு!

Tuesday, 14 February 2017

என் நேசமே!
பனி படர்ந்த மலையின் சிகரம் காட்டி,
அடர் கானக இருட்டில் இயற்கையின் ரகசியம் காட்டி,
ஆழ் கடலின் அதிசயங்களும் காட்டி,
முரண்பாடான மனித உறவுகளின் உரசல்கள் காட்டி
வாழ்வின் பரிணாமங்கள் புரிதலும் உணர்த்தினாயே!
என் அருமை புத்தகமே!
வருவாயா வாழ்க்கை முழுக்க?
என்னுடன் உறவாடி,

என்னை மேம்படுத்த!!!!!!

Thursday, 2 February 2017



இலக்கு தெரிந்தும் குழப்பம் ஏன்?
குறிக்கோள் இருந்தும் கலக்கம் ஏன்?
பலவீனம் திருத்தி பலத்தை உயர்த்தி
இலக்கை நோக்கி முயற்சி எடுத்தால்
உன் இடம் இதுவாக இருக்காது!


உயர்ந்த இடம் போக இதுதான் நேரம்!
தள்ளி போட்டால் காலம் உன்னை தள்ளி விடும்!


உள்ளிருக்கும் ஆற்றலை உனை
உயர்த்த உபயோகி! மங்கி போக விட்டு
மனம் போன போக்கில் போனால்,
உன் அறிவு சோர்ந்தால்,
எட்டுத்திக்கும் புகழ் பரவ வேண்டிய நீ
சொந்த வீட்டிலேயே காணமல் போவாய்!


உன் உயரம் நீயே அறிதல் வேண்டும்!
உன் அறிவு ஆற்றல் கம்பீரம் நான் காண வேண்டும்!
காத்திருக்கிறேன் உன் காதலியாய்!

ஆம்! உனை நான் அறிவேன்!
உன் ஆற்றலும் அறிவேன்!
எனை நீ அறியாய்!
வெற்றி என்பது என் பெயர்!!!