பிரதம மந்திரியின் சுய வேலை வாய்ப்பு திட்டம் (PMEGP)
இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படும் தொழில்கள்:
உணவு பதப்படுத்துதல்,
காகிதம், நார், மண் வளம் சார்ந்த தொழில்கள், பயோ தொழில்நுட்பம் என வேளாண் சார்ந்த மதிப்பு
கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு.
இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படாத தொழில்கள்:
புகையிலை பொருட்கள்
தயாரிப்பு, மது பரிமாறும் உணவு விடுதி, டீ, காபி, ரப்பர் போன்ற மலைத்தோட்டப்பயிர்கள்
பயிரிடுதல், பட்டு புழு வளர்ப்பு, மீன், பன்றி, கோழி, ஆடு, மாடு வளர்ப்பு தொழில்,
அறுவடை இயந்திர தொழில், போக்குவரத்து வாகனத்தொழில்.
இத்திட்டத்தில் சொந்த
முதலீடு எவ்வளவு போடணும்?
புராஜெக்ட் ரிப்போர்ட்டில்
குறிபிட்டுள்ள தொகையில் பொதுப்பிரிவினராக இருந்தால் 10%, சிறப்பு பிரிவினரான தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினர்
முன்னாள் ராணுவத்தினர் 5%.
வயது வரம்பு: 18வயது முதல்.
அதிக பட்ச வயது இல்லை, 50 வயதுக்கு மேலும் விண்ணப்பிக்கலாம்.
குழுதிட்டம் இல்லை.
இது ஒரு தனி நபர்
திட்டம்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம்: மானியம் நீங்கலாக 5முதல் 7ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
தொழில் உதவி:
இத்திட்டத்தில் தொழில்
தொடங்கிய பிறகு தேவைப்படும் உதவிகளை இத்திட்டத்தின் உற்பத்திப் பிரிவின் கீழ்
பயனாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மேம்படுத்துவது, விற்பனை செய்வதற்கு உதவியாக பொருட்காட்சி, விற்பவர்-வாங்குபவர்
சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை கதர் கிராம தொழில் ஆணையம் , மாவட்ட தொழில் மையம்
மூலம் நடத்தப்படும்.
ஆதாரம்: தமிழ் ஹிந்து 05ஜூலை 2014 .