Friday, 22 August 2014

விதவை திருமண நிதியுதவி திட்டம்



டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டம்
வயது:  மணமகனுக்கு: 40 வயது மிகாமலும்,
        மணமகளுக்கு : 20 வயதுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
வருமானம் : உச்ச வரம்பு இல்லை
விண்ணப்பிக்கும் காலம்: திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள்
                             விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை: 1. விதவை சான்று
                          2.மறுமண அழைப்பிதழ். அல்லது
                                                                மறுமண பதிவு சான்று
அரசால் வழங்கப்படுவது: ரூ.15,000/-  ( அதில், ரூ.5,௦௦௦/- காசோலையாகவும்,           ரூ.10,௦௦௦/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                               அல்லது    
                                                                                                 2.  சமூக நல விரிவாக்க அலுவலர்.

கலப்பு திருமண நிதியுதவி திட்டம்



கலப்பு திருமண நிதியுதவி திட்டம்
திட்டம் 1                       
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு இல்லை
படிப்பு: 1. பள்ளியில் படித்தவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
        2.  Tutorial  படித்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
       3. பழங்குடியினர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்துக்கு பின் இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை:
                           1.கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல் (TC)
                          2.மதிப்பெண் பட்டியல் நகல், (MARK SHEET)
                           3.திருமண அழைப்பிதழ். அல்லது திருமண பதிவு சான்று
                          4.மணமகன் வயது, சாதி சான்று
                          5.மணமகள் வயது, சாதி சான்று
அரசால் வழங்கப்படுவது: ரூ.25,000/- (அதில் ரூ.15,௦௦௦/- காசோலையாகவும், ரூ.1,௦௦௦/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.) மற்றும் 4 கிராம் தங்கம்.
                       
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                               அல்லது    
                                                                                                 2.  மகளிர் ஊர் நல அலுவலர்.
                             
திட்டம் 2.:
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு இல்லை
 படிப்பு:  கல்லூரி, தொலைதூரக்கல்வி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட
                  திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டம் (அல்லது)
                  தமிழக அரசு தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால்
                  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்ற பட்டயம்
விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்துக்கு பின் இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை: 1.கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல் (TC)
                                                                2.பட்டப்படிப்பு சான்று நகல் (அல்லது) பட்டயம் சான்று                                                               நகல்  (Degree certificate copy or Diploma Certificate Copy)
                                                               3.திருமண அழைப்பிதழ். அல்லது
                                                                திருமண பதிவு சான்று
                                                                4.மணமகன் வயது, சாதி சான்று
                                                                5.மணமகள் வயது, சாதி சான்று
அரசால் வழங்கப்படுவது: ரூ.50,000/-  ( அதில், ரூ.3௦௦௦௦/- காசோலையாகவும்,           ரூ.2௦௦௦௦/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.), மற்றும் 4 கிராம் தங்கம்
                       
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                               அல்லது    
                                                                                                 2.  மகளிர் ஊர் நல அலுவலர்.

ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்



அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
குடும்ப ஆண்டு வருமானம் : உச்ச வரம்பு இல்லை
விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்துக்கு 40 நாட்கள் முன்னர்.
இணைக்க வேண்டியவை:
1.தாய் மற்றும் தந்தை இறப்பு சான்று வழங்க வேண்டும்.
2.நாடாளுமன்ற உறுப்பினரிடம் சான்று.
3.திருமண அழைப்பிதழ்.
அரசால் வழங்கப்படுவது: ரூ.15,000/-
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                     அல்லது    
                                                                                                 2.  மகளிர் ஊர் நல அலுவலர்.