Friday, 18 July 2014

தாட்கோவின் திட்டங்கள்



தாட்கோ திட்டங்கள்
தொழில் முனைவோர் திட்டம்:
கடனுதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்தல்:
1. பழங்குடியினராக இருக்க வேண்டும்.
2.வயது: 18-55
3.திட்டம் குறித்த விவரம்,
4.செயல்திறன்
மேற்கூறியவை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு செய்யப்படுபவர்களின் விண்ணப்பங்கள் தாட்கோ மூலமாக அனுப்பப்படும்.
ஆய்வு செய்யும் அதிகாரிகள்: ஒவ்வொரு வட்டாரத்திலும் (ஊராட்சி ஒன்றியம்) விண்ணப்பதாரர்களை நேர் கானல் செய்வார்கள். அந்தந்த தாட்கோ மேலாளர், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், ஆதி திராவிடர் நலத்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சேவை பகுதி வங்கியாளர் ஆய்வு செய்வார்கள்.
வங்கி கடனில் மானியம் உண்டா?
தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம்  50% அல்லது ரூ 3.75லட்சம் – இதில் எது குறைவோ அது மானியமாக அளிக்கப்படும். மானிய தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தொழில் முனைவோர் திட்டம் தவிர வேறு திட்டங்கள்:
இளைஞர்களுக்காக சுய வேலை வைப்பு திட்டம் (SELF EMPLOYMENT PROGRAMME FOR YOUTH-SEPY)
இத்திட்டத்தில் பழங்குடியினர் வாகனம் வாங்க முடியும்.
வாகனம் வாங்க கடன் வாங்குவோர் ஓட்டுனர் உரிமம், பாட்ஜ் வைத்திருக்க வேண்டும்.முன் அனுபவம் அவசியம். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில், வட்டார போக்குவரத்து துறையில் ஒருவரும் பிற அதிகாரிகளும் கொண்ட  ஒரு குழு விண்ணப்பதாரரை தேர்வு செய்து வங்கிக்கு கடனுதவி அளிக்க பரிந்துரை செய்வார்கள்.
இந்த வாகன கடனுதவி திட்டத்தில் மானியம்:
பயணியர் வாகனமாக இருந்தால் திட்ட மதிப்பீடு ரூ. 8 லட்சமாக இருக்க வேண்டும். அதற்கு மானியம் 50% (ரூ.4லட்சம்) மிகாமல் வழங்கப்படும்.
பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனமாக இருந்தால் அவற்றின் திட்ட மதிப்பீடு ரூ.11 லட்சம் வரை இருக்க வேண்டும். மானியம் ரூ.5.50 லட்சம் வரை வழங்கப்படும்.
ஆதாரம் இந்து தமிழ் தேதி: ஜூலை 18,2014.

No comments:

Post a Comment